Ola Electric Scooter: நிறுவனம் நேரடியாக வாடிக்கையாளருக்கு ஹோம் டெலிவரி செய்யும்.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான முன்பதிவு செய்யப்பட்ட பின்னர், வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர்களை ஹோம் டெலிவரி செய்ய ஓலா திட்டமிட்டுள்ளது.
- ஓலா ஸ்கூட்டருக்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன்பு வெறும் 499 ரூபாய்க்கு தொடங்கியது.
- முதல் நாள் புக்கிங்கிலேயே சாதனை அளவு முன்பதிவு செய்யப்பட்டது.
- ஒலா தற்போது வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியை அளித்துள்ளது.
ஓலா ஸ்கூட்டருக்கான (Ola Electric Scooter) முன்பதிவு சில நாட்களுக்கு முன்பு வெறும் 499 ரூபாய்க்கு தொடங்கியது. இந்த மின்சார ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். 24 மணி நேரத்திற்குள், இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு 1 லட்சத்தைத் தாண்டியது.லாஜிஸ்டிக்ஸ் பிரிவே ஸ்கூட்டரைப் பதிவு செய்து வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே டெலிவரி செய்யும். ஹோம் டெலிவரிக்காக நாட்டின் பல இடங்களில் டெலிவரி மையங்கள் (Delivery Hub) அமைக்கப்படும். ஸ்கூட்டர்கள் இங்கு வைக்கபட்டு அங்கிருந்து வாடிகையாளர்களின் முகவரிக்கு டெலிவரி செய்யப்படும்.