கொரோனா உலகின் பல லட்சம் குழந்தைகளை அனாதைகள் ஆக்கியுள்ளது.

கொரோனா காரணமாக பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளில் தென்னாப்பிரிக்கா, பெரு, அமெரிக்கா, இந்தியா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகியவை அடங்கும்.

  • COVID-19 காரணமாக உலகளவில் 1.5 மில்லியன் குழந்தைகள் பெற்றோரை, பாதுகாவலர்களை இழந்தனர் என லான்செட் ஆய்வு கூறுகிறது
  • அவர்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தொற்றுநோயின் முதல் 14 மாதங்களில், தாய் – தந்தை இருவர், அல்லது இருவரில் ஒருவரை இழந்துள்ளனர்.

அவர்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தொற்றுநோயின் முதல் 14 மாதங்களில், தாய் – தந்தை இருவர், அல்லது இருவரில் ஒருவரை இழந்துள்ளனர். மேலும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர், தாத்தா -பாட்டியின் பராமரிப்பில் இருந்த நிலையில், அவர்கள் மரணமடைந்ததால், அனாதைகள் ஆனதாக, இந்த ஆய்வு மதிப்பிடுகிறது.

இந்தியாவில், மார்ச் 2021 (5,091) உடன் ஒப்பிடும்போது ஏப்ரல் 2021 காலகட்டத்தில் புதிதாக அனாதையான (43,139) குழந்தைகளின் எண்ணிக்கையில் 8.5 மடங்கு உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.