தமிழக பிளஸ் 2 மாணவர்கள் இன்று முதல் தங்கள் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை அளித்துள்ள இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகள் ஜூலை 19 ஆம் தேதி வெளியிடப்பட்டன. கடந்த மே மாதம் பிளஸ்-2 (12th Exam Results) பொதுத்தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று அச்சம் காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் , மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி எனவும் தமிழக அரசு (TN Govt) அறிவித்தது.
மதிப்பெண் வழங்குவதற்கான நெறிமுறைகள் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்றன. 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் மாணவர்கள் மதிப்பெண்களை பதிவிற்க்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பிளஸ் 2 மாணவர்கள் இன்று முதல் தங்கள் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை அளித்துள்ள இணைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.