இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது.
இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இந்தியா. India Tour of Sri Lanka: இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தனர். 276 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. கடந்த போட்டியில் அசத்திய பிரித்வி ஷா 13 ரன்கள் எடுத்து முதலில் அவுட் ஆனார், ஷிகர் தவான் (29), இஷான் கிஷன் (1) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 12 ஓவரில் இந்தியா 65 ரன்கள் எடுத்து இருந்தது. 4-வது விக்கெட்டுக்கு மணீஷ் பாண்டே உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி 50 ரன்கள் சேர்த்தது.