நாட்டில் போதுமான அளவு கொரோனா தடுப்பூசிகள் உள்ளன; எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன – பிரதமர் மோடி

  • , ‘கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது என்று யாரும் அச்சப்படத் தேவையில்லை. போதுமான தடுப்பூசிகள் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால், துரதிருஷ்டவசமாக எதிர்கட்சிக்ள இந்த விவகாரத்தில் அரசியல் செய்கின்றன. தடுப்பூசிகள் வீணாவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து மக்களுக்கு இருக்கும் அச்சத்தைப் போக்க மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். மிகுந்த வருத்தத்துக்குரிய விஷயமாக இந்தியத் தலைநகரில் 20 சதவீத முன்களப் பணியாளர்கள் இன்னமும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை.