சிறந்த இரத்ததான சேவைக்கான பாராட்டு சான்றிதழ்! மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டு

சிறந்த இரத்ததான சேவைக்கான பாராட்டு சான்றிதழ்! மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டு :

விருது நகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியின் சார்பில் தொடர்ந்து மருத்துவ உதவிகளும் அவசர கால இரத்ததான சேவைகளும் செய்யப்பட்டு வருகிறது.

அதை தொடர்ந்து விருது நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவில் சிறந்த இரத்ததான சேவைக்கான சான்றிதழை மனிதநேய ஜனநாயக கட்சிக்கு மாவட்ட ஆட்சியர் திரு.மேகநாத ரெட்டி, அவர்கள் வழங்கி பாராட்டினார்.

சான்றிதழை மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் நூர்முகம்மது, அவர்கள் பெற்றுக் கொண்டார்.

N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்