குடியரசுத் தலைவருக்கு புத்தகத்தை பரிசளித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் திரு/ மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரு/ ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, குடியரசுத் தலைவருக்கு மதுரையைப் பற்றி மனோகர் தேவதாஸின் நூலான ‘தி மல்டிபிள் ஃபேக்ட்ஸ் ஆஃப் மை மதுரை’ என்ற நூலினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித்தார்.

குடியரசுத் தலைவரை முதல்வரான பிறகு மு.க. ஸ்டாலின் சந்திப்பது இதுவே முதல்முறை.

இந்த சந்திப்பின் போது, தமிழக சட்டப்பேரவையின் நுறாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரு/ ராம்நாத் கோவிந்த் க்கு தமிழக முதலமைச்சர் திரு/ மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்ததையடுத்து, அவரும் விழாவில் பங்கேற்க ஒப்புதல் அளித்திருப்பதாக திரு/
மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரு/ ராம்நாத் கோவிந்த் உடனான சந்திப்பின்போது மனோகர் தேவதாஸின் ஓவியத்துடன் எழுதப்பட்ட ‘மல்டிபிள் பேக்ட்ஸ் ஆஃப் மை மதுரை’ (Multiple Facets of My Madurai) ​என்ற நூலையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

மனோகர் தேவதாஸ்.. எழுத்தாளராகவும், ஓவியராகவும் புகழ்பெற்றவர். 1936ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். இவருக்கு 2020ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில், மதுரையைப் பற்றிய தகவல்கள் அழகிய ஓவியங்களுடன் இடம்பெற்றிருப்பது தனிச்சிறப்பு.

இவர் தி கிரீன் வெல்ஸ் இயர்ஸ், மல்டிபிள் பேக்ட்ஸ் ஆஃப் மை மதுரை, எனது மதுரை நினைவுகள், நிறங்களின் மொழி, கனவுகள், பருவங்கள் மற்றும் வாக்குறுதிகள், தைரியத்துக்கு ஒரு கவிதை, பட்டாம்பூச்சியும் மஹிமாவும் என்ற நூல்களை எழுதியுள்ளார்.

இவர் வரைந்த கலைநயமிக்க மதுரை கோயில்கள் மற்றும் புராதான கட்டடங்களின் கருப்பு வெள்ளை கோட்டுச் சித்திரங்களும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது மிகவும் சிறப்பாகும்.

மதுரையைப் பற்றிய புத்தகத்தை குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசளித்திருப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

NEWS: S.MD.RAWOOF