பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தொடர்பாக அரசின் முடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்…
பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “கொரோனா மூன்றாம் அலை வரக்கூடாது என்பது தான் அனைவரின் எண்ணம். ஒருவேளை வந்தால் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கமுடியாத சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.