புதிய சாதனையை படைத்த நடிகர் தனுஷ்…

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான தனுஷ், ட்விட்டரில் புதிய சாதனை படைத்துள்ளார்.

 நடிகர் தனுஷ் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் நடிக்க உள்ள முதல் தெலுங்கு படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்க உள்ளார். இவ்வாறு பல்வேறு மொழிகளில் நடித்து வரும் தனுஷை சமூக வலைதளங்களில் பின் தொடர்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நியலையில் தற்போது நடிகர் தனுஷ் ட்விட்டரில் புதிய சாதனையை படைத்துள்ளார். நடிகர் தனுஷை ட்விட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியை எட்டி உள்ளது. ட்விட்டரில் 1 கோடி ஃபாலோயர்களை பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார் நடிகர் தனுஷ்.