சர்க்கரை நோய் – இந்த பொடி சாப்பிடுங்க..
சிறுகுறிஞ்சான் வேலிகளில் படரக்கூடியது. எளிதாக இதை பெறலாம். நாவல் கொட்டைகளை சுத்தமாக கழுவி வெயிலில் உலரவைத்து எடுக்கவும். நாவல் கொட்டையை உரலில் இடித்து மிக்ஸியில் அரைத்து சலித்து வைக்கவும். சிறு குறிஞ்சான் இலையை உலரவைத்து மிக்ஸியில் பொடித்து சலித்து எடுக்கவும்.
இரண்டையும் சம அளவு கலந்து கண்ணாடி பாட்டிலில் வைத்துகொண்டு தொடர்ந்து 21 நாட்கள் காலை, மாலை அரை டீஸ்பூன் அளவு வாயில் போட்டு வெதுவெதுப்பான நீர் குடிக்க வேண்டும். பிறகு இரத்த சர்க்கரை அளவை பரிசோதியுங்கள். பிறகு மீண்டும் 21 நாட்கள் எடுக்க வேண்டும். உணவிலும் கட்டுப்பாடுகள் கடைபிடியுங்கள். நிச்சயம் மாற்றம் இருக்கும்.