வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜெர்மனி..

ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் ஆகிய நாடுகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஜெர்மனியின் ஆர்வீலர் மாவட்டத்தில் கனமழை பெய்ததால், அப்பகுதி வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.சாலைகள் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிப்பதால் பலர் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெளியே வர முடியாத அளவுக்கு வீதிகளை வெள்ளநீர் சூழ்ந்ததால், மக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.