பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்…
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், புதியதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Cheif Minister MK Stalin) காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினார். அதில், காவல்துறை என்பது, குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத் தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலையை உருவாக்கும். துறையாக செயல்பட வேண்டும். மேலும், பெண்கள் (Women Safety) மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை களைந்திட கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்துடன் பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை தலையாய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும். மேலும் காவலர்களுக்கான சலுகைகள், விடுப்புகள், வீட்டுவசதிக்கான வழிமுறைகளை மேம்படுத்த வேண்டும்.விபத்துகள் நடந்த இடங்களை அறிவியல் பூர்வமாக பகுப்பாய்வு செய்திடவும், அதிக வாகன விபத்துகள் ஏற்படும் இடங்களுக்கு அருகாமையில் உள்ள கடைகள், உணவகங்களில் உள்ள நபர்களுக்கு முதலுதவி செய்யும் முறைகள் குறித்து பயிற்சி அளித்திட வேண்டும். பள்ளி மாணவ, மாணவியருக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.