பயணிகளுக்கு முன்னறிவிப்பு!


ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தன. அதன்பின்னர் மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் அடிப்படையில் தற்போது சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

எனினும், சென்னை – மன்னார்குடி இடையேயான விரைவு ரயில் சேவை அண்மையில் தான் தொடங்கியது. இந்நிலையில், தற்போது அந்த ரயில் சேவையின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை-மன்னார்குடி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06179), இன்று (டிச.8) முதல் சென்னையில் இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.45 மணிக்கு மன்னார்குடி சென்றடையும்.

ரயில்களின் நேரங்களில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், பயணிகள் அனைவரும் ரயில்வே இணையதளம் மற்றும் செயலிகள் மூலம் உரிய நேரம் குறித்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஆதித்யா
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்