ஆசைகள் மறையும் போது கவலைகளும் மறைகின்றன.

அப்பொழுது மனம் பிரச்சனைகளிலிருந்து விடுபடுகிறது. எவருக்கு எதுவும் தேவையில்லையோ அவர் ஒரு முடிசூடா மன்னர்..!!
செல்வத்தை விட ஆறுதலான வார்த்தைகளைத்தான் மனிதர்கள் அதிகமாக தேடுகிறார்கள்…!!

பெரும்பாலான மக்கள் பணத்திற்காக பணியாற்றினாலும் வெறும் சம்பளத்தால் மட்டும் திருப்தியடைந்து விடுவதில்லை..!அதைத்தாண்டி தங்கள் உழைப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை விரும்புகின்றனர்..!!
எண்ணத்தில் உதிப்பதெல்லாம் உதிர்ந்து விடுகிறது எழுத்துக்களாக இங்கு…✍️யாருடைய நடிப்பிலோ ஏமாறுகிறோம் என்று உணர தெரிந்த நமக்கு

நம்முடைய நடிப்பிலேயே நாம் ஏமாந்து கொண்டே இருக்கிறோம் என்று ஏனோ உணர தெரியவில்லை

நான் இப்படித்தான் என்று நாமே நம்புவது கூட அதனால் தான் நீங்கள் எப்படியும் ஆனவர்கள் தான்..!

எப்படியும் ஆனவன் படைப்பு தானே நாம்

நாம் எல்லோரும் இரண்டு வாழ்க்கை வாழ்கிறோம்..! ஒன்று வெளிபடையாக இன்னொன்று மனதில் பூட்டி வைத்துபடியே. பல நேரங்களில் இதில் யார் நாம் எது உண்மையானது எது தன்மையானது யார் கட்டுப்பாட்டில் நாம் இருக்கிறோம் என்ற குழப்பம் தலையை காட்டி விட்டுச் செல்லும்..!!

நீங்கள் எதையுமே நிராகரிக்கவில்லை ??

அப்படி நினைத்துக்கொண்டு !! உங்களையே ஏமாற்றிக்கொண்டு !!
அதையே அதிகம் உங்களுள் ஏற்றுக்கொண்டு சிந்திக்கிறீர்கள் …!!

நீங்கள் அதிகம் விரும்புவதை விட !! நீங்கள் நிராகரித்தது மீது தான் உங்கள் கவனம் அதிகமாக இருக்கும் ..!

இதுவே எதார்த்தம் ..!!
ஊரை ஏமாற்றும் புத்திசாலியாக
இருப்பதை விட ஒன்றும் தெரியாதது
முட்டாளாக இருப்பது மேல்..!!

    இயலாதவன் கையில் எடுக்கும் கடைசி ஆயுதமே விமர்சனம்...!!

இயன்றவன் அதை தடுக்க ஏந்திடும் ஆயுதமே புன்னகை…!!

என்ன வந்தாலும் எது நடந்தாலும் புன்னகையுடன் இருப்போம்…!!

 தவறுகள் இழப்புகள் என்று

எதுவும் இல்லை..
எல்லாமே நமக்கு வாழ்க்கை
தந்த பாடங்கள்

தெளிவும் உறுதியும் ஒரு மனிதனிடத்தில் இருந்தால் போதும்.. அது எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் ஈசியா கடந்து போகலாம்..!

உங்களின் ஶ்ரீ