தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ம் தேதி மின்தடை

தூத்துக்குடியில் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நகர்ப்புற பகுதிகளில் வருகிற 17ம் தேதி (சனிக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி நகர்புற மின்விநியோக செயற் பொறியாளர் விஜயசங்கர பாண்டியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் “தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் அமைந்துள்ள நகர் உபமின் நிலையத்தில் வருகிற 17ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக ஆண்டாள்தெரு, சத்திரம் தெரு, போல்பேட்டை, 1ம் கேட், 2ம்கேட், மட்டக்கடை, பீச்ரோடு, இனிகோ நகர், விஇ ரோடு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், அண்ணா நகர், ஜெயராஜ் ரோடு, மீனாட்சிபுரம், தாமோதரநகர், எட்டயபுரம் ரோடு, தெப்பகுளம், சிவன் கோவில் தெரு, டபிள்யூஜிசி ரோடு, சந்தை ரோடு, ஜார்ஜ் ரோடு, சண்முகபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, இஞ்ஞாசியார் புரம், எழில் நகர், அழகேசபுரம், முத்துகிருஷ்ணா புரம், குறிஞ்சி நகர், விவிடி ரோடு, போல்டன் புரம், சுப்பையா புரம், பாளை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர், முத்தம்மாள் காலனி, கேடிசி நகர், ஹவுசிங்போர்டு காலனி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

செய்தியாளர் செல்வராஜ்

தூத்துக்குடி