மும்பையில் கனமழை
மும்பையில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து இன்று காலையும் தொடர் மழை பெய்ததால் மும்பை சாலைகள் எங்கும் நீர் தேங்கியது. ஈஸ்டர்ன் சாலையில் பெருமழையால் சரக்கு லாரி கவிழ்ந்தது. மும்பை காந்தி மார்க்கெட் முழுதும் வெள்ளம் பெருக்கெடுத்தது. இன்னும் 24 மணி நேரம் வரை மழை தொடரும் என்ற வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது