மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவு தினம் இன்று

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் 06 ஆம் ஆண்டு நினைவு  தினம் இன்று… (14_07_2021)….
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
தமிழ்த்திரையுலகம் எத்தனையோ பல இசை மேதைகளை கண்டுள்ளது, ஓவ்வொருவரும் காலத்திற்கேற்ப ஆற்றல்களை வெளிப்படுத்தி தனது இசைச்சேவையை  வழங்கியுள்ளார்கள், இவர்களில் மிக முக்கியமான இசையமைப்பாளர் தான் “மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன், தமிழ்த்திரையுலகில் இசைக்கான சிம்மாசனத்தில் ஏறக்குறைய 70ஆண்டுகள் கோலோச்சிய பெருமையை கொண்டவர் எம் எஸ் வி மட்டுமே, தமிழ்திரையின் சரித்திரத்தை சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். இல்லாமல் எவ்வாறு எழுத முடியாதோ அவ்வாறே தமிழ்த்திரையிசையுலகின் வரலாற்றை  எம்.எஸ்.விஸ்வநாதன் இல்லாமல் எழுத முடியாது. 1963 இல் சென்னையில் “ராஜா அண்ணாமலை”மன்றத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்திக்காக ஓர் விழா எடுத்தார்கள் ,அப்போது நடிகர்  திலகம் சிவாஜி கணேசனால் “மெல்லிசை மன்னர்கள்” என புகழாரம் சூட்டப்பட்டார்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி கூட்டணி தற்போது  போல்  தொழில்நுட்பம் இல்லாத காலங்களில் மிகவும் பிரபல்யமாக விளங்கினார் இளையராஜா போன்றவர்கள் இவர்களினால் பட்டைத்தீட்டப்பட்டவர்களே.தமிழ்த்திரை இசையுலகில் பல வழிகளிலும் முன்னோடியாக இருந்தவர்கள் இவர்களே. தமிழ் நாட்டில் பாடப்படும் “தமிழ்த்தாய் “வாழ்த்தாகிய “நீராடும் கடலுடுத்த”என்ற பாடலுக்கு இசையமைத்தவர் விஸ்வநாதன் ,வழமை போல் திறமையுள்ள  தமிழ் கலைஞர்களை  மத்திய அரசு கண்டுகொள்வதில்லை.இந்த பட்டியலில் தேசிய அளவில் சரியான அங்கீகாரம் விஸ்வநாதனுக்கும் கிடைக்கவில்லை.மாநில அரசு மட்டுமே இவரை பல தடவை கௌரவித்திருக்கின்றது.இவரது இசையில் பாடாத பாடகர்களே இல்லை எஸ் பி பாலசுப்பிரமணியம் வாழ்வில் ஒளியேற்றியவர் விஸ்வநாதன் ,1969 இல் “சாந்தி நிலையம்”படத்தில் இவரது இசையில் எஸ். பி .பாலசுப்பிரமணியம் பாடிய “இயற்கை எனும் இளைய கன்னி”என்ற பாடல் மிகவும் பிரகாசித்தது, மக்கள் திலகத்தின் “அடிமைப்பெண்”படத்தில் சௌந்தரராஜன் பாடவிருந்த ” ஆயிரம் நிலவே வா,,,பாடலை விஸ்வநாதனின் சிபாரிசில்  கே. வி.மகாதேவன் இசையில் பாடி ஒரே நாளில் பேசப்பட்டார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். விருதுகளைப்பற்றி விஸ்வநாதன் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் நடந்த ஓர் மாபெரும் விழாவில் விஸ்வநாதனுக்கு அறுபது தங்கக்காசுகளும் ஒரு  காரும் பரிசாக வழங்கப்பட்டு “இசைச்சக்கரவர்த்தி “என்ற பட்டமும் கிடைக்கப்பெற்றது. .இலங்கைக்கும் விஜயம் செய்து இசைக்கச்சேரிகளை நடத்தியுள்ளார்,பல வெளிநாடுகளிலும் இசைக்கச்சேரிகள் நடத்தியுள்ளார் இவர் மனைவி ஜானகி, இவருக்கு சாந்தி,லதா,மது,கோபிகிருஷ்ணன் என நான்கு பிள்ளைகள்,   எம் .எஸ்.வி.இதன் அர்த்தம் மனையங்கம்  சுப்ரமணியம் விஸ்வநாதன் (MSV)என்பதாகும். 1928 ம் ஆண்டு 06ம் மாதம் 24ம் திகதி கேரள மாநிலம், பாலக்காடு எலப்புள்ளி என்ற கிராமத்தில் ஓர் ஏழ்மை நிறைந்த குடும்பத்தில்  திரு திருமதி சுப்ரமணியம் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார் எம் எஸ் விஸ்வநாதன். தனது 4 வயதில் தந்தையை இழந்தார். வறுமையின் கோரப்பிடியில் தாயின் அரவணைப்பில் வளந்தார்.வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலையில் ,ஆடிப்பாடி விளையாடி மகிழ வேண்டிய  தனது பால்யப்பருவத்தில் கூலி வேலைகள் செய்து பிழைப்பை ஓட்டினார். ஒரு கட்டத்தில் தாளாத வறுமையால் தற்கொலை முயற்சிக்கு ஆளானார். இவரது தாத்தா கிருஷ்ணன் நாயர்  இவரைக்காப்பாற்றி தான் பணிபுரிந்த கண்ணூருக்கு இவரை அழைத்துச்சென்று. அங்கு ஓர் சினிமா தியேட்டரில் சம்பளமின்றி வெறும் சாப்பாடு மட்டுமே என்ற அடிப்படையில் தியேட்டரில் நொறுக்குத்தீனி விற்று தனது பசியை மட்டுமே ஆற்றிக்கொண்டார் பால்ய விஸ்வநாதன். அப்போது அதே கண்ணூரில் “நீலகண்ட பாகவதர் என்பவர் இசைப்பயிற்சி பள்ளி நடத்திவந்தார் வசதியான வீட்டுப்பிள்ளைகள் மட்டுமே அக்காலத்தில் இசை பயில முடியும் என்ற நிலையுள்ளகாலம். நீலகண்ட பாகவதர் மற்ற பிள்ளைகளுக்குப் பாடம் புகட்டுவதை மறைந்திருந்து பார்த்து(மகாபாரதத்தில் ஏகலைவனைப்போல்) சுயமாகவே பயிற்சி கொள்வார் விஸ்வநாதன், இதை ஒரு நாள் கவனித்த பாகவதர் ,விஸ்வநாதனை அழைத்து வாத்யங்களை வாசிக்கச்சொல்ல விஸ்வநாதனும் பிரமாதமாக ஒவ்வொரு வாத்யங்களையும் நேர்த்தியாக வாசித்து காட்டி வாத்யாரை அசத்தினார், பாகவதர் விஸ்வநாதனை வெகுவாக பாராட்டி பயிற்சி கொடுத்து உதவினார். இவரிடம் கற்ற கர்நாடக சங்கீதம்தான் பிற்காலத்தில் இவருக்கு பெரிதும் உதவியாக அமைந்தது. ஒரு கச்சேரியில் தொடர்ந்து 3 மணி நேரம் வாத்யங்களை வாசித்தும்,பாடியும் அங்கிருந்தவர்களை வியப்புக்குள்ளாக்கி அமோக பாராட்டு பெற்றார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் ஆர்வம் கொண்டவர் விஸ்வநாதன், பின் நடிகராக வேண்டும் என்ற எண்ணத்தில் கோயம்புத்தூர் சென்றார். அந்நேரத்தில் பிரபல்யமாக விளங்கிய சினிமா நாடகக் கம்பனியான “ஜுபிடர்ஸ் பிக்சர்ஸ் “இல் வெறும் 3/= ரூபா மாதச்சம்பளத்தில்  பணியாற்றினார். ஒரு சமயத்தில் பழம் பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா நடத்திய  ராமாயண சுயம்வர  நாடகத்தில் மன்னராக விஸ்வநாதன்  நடித்துக்கொண்டிருந்த வேளையில் இவர் கையில் வைத்திருந்த வில் எதிர்பாராமல் உடையவே,ரசிகர்கள் நீதான் சீதையை திருமணம் செய்ய வேண்டும் என கூச்சலிட்டனர். பயத்துடன் ஒப்பனை அறைக்குச்சென்ற விஸ்வநாதனை டி.எஸ். பாலையா கோபத்தில்  ஓங்கி ஒரு அறை விட்டிருக்கின்றார், ஓரு நிகழ்வில் இதை விஸ்வநாதன் சொல்லி நினைவூட்டியுள்ளார்.இப்படி  முக்கியத்துவம் இல்லாத சிறு வேடங்களில் நடிப்பதை ஓரங்கட்டிவிட்டு.கோவை செனட்ரல் தியேட்டர்ஸ்  சினிமா ஸ்டூடியோவில் ஆபிஸ் பையனாக பணிக்கு சேர்ந்தார்,அந்நேரத்தில் சென்ட்ரல் ஸ்டுடியோ ஓர் புதிய படத்தை தயாரித்துக்கொண்டிருந்தது. அப்படத்திற்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடுதான் இசையமைப்பாளர், அப்படத்தில் இடம்பெறும் ஓர் பாடலுக்கு சரியாக மெட்டு அமையாததால் ஆழ்ந்த குழப்பத்தில் இருந்தார் நாயுடு, அப்போது அடுத்த அறையில் இருந்து இதை  கவனித்த விஸ்வநாதன் அப்பாடலுக்கு நாயுடுவின் ஆர்மோனியத்தில் ஓர் பதிய மெட்டு போட்டார். இதைக்கவனித்த சுப்பையாநாயுடு விஸ்வநாதனை வெகுவாக பாராட்டினார்.  அப்பாடல்தான் விஸ்வநாதன் முதன் முதலாக இசையமைத்த “புது வசந்தமாமே உன் வாழ்விலே”என்ற பாடல் ,அப்பாடல் வரிகளுக்கு ஏற்ப விஸ்வநாதன் வாழ்விலும் வசந்தம் வீச  ஆரம்பித்தது. பிறகு  தனக்கு  உதவியாளராக விஸ்வநாதனை நியமித்து சில படங்களுக்கு இசையமைத்தார் சுப்பையா நாயுடு. ஆனால் திரையில் விஸ்வநாதன் பெயர் வரவில்லை. பின்னர் சென்னைக்கு விஜயம் செய்த சுப்பையா நாயுடு  விஸ்வநாதனையும் கூட்டிச்சென்றார் ,  அப்போது  நீண்ட  நெடிய  இன்னல்களுக்கு மத்தியில் 1952 இல் எம்.ஜி.ஆர்.இன் :ஜெனோவா”படத்தில் இசையமைக்க ஓர் வாய்ப்பு கிடைத்தது. இவ்வேளையில் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  “பராசக்தி”யில் அறிமுகமாகி ஓரே படத்தின் வாயிலாக  பிரகாசித்திருந்த தருணம் ,அப்போது  கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் என் எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் கவியரசு கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.ஸ்ரீனிவாசன் தயாரித்த “பணம்”என்ற படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாட்டியப் பேரொளி பத்மினியுடன் நடிக்க இதற்கு இசையமைப்பாளர்களாக விஸ்வநாதன் ராமமூர்த்தி கூட்டணிக்கு என். எஸ் கிருஷ்ணன் மூலம் ஓர் பொன்னான வாய்ப்பு கிடைக்கவே இதை இவர்கள் சரியாகப்பயன்படுத்திக்கொண்டனர் பின் சென்னையில் இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பராமனின் அறிமுகம் கிடைக்கவே அவரது இசைக்குழுவில் இணைந்து பணியாற்றினார் ,அக்குழுவில்  டி.கே .ராமமூர்த்தியும் பணியாற்றினார். 1953ம் ஆண்டு நாகேஸ்வரராவ் கதாநாயகனாகவும் நடிகையர் திலகம் சாவித்திரி கதாநாயகியாகவும் நடிக்கும் “தேவதாஸ் ” படம் உருவாகிகொண்டிருந்தது ,இப்படத்திற்கு இசை சி.ஆர். சுப்பராமன், அவருக்கு உதவியாக விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் பணியாற்றினர்,இரண்டு பாடல்களுக்கு மட்டும் மெட்டு போட்ட நிலையில் இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் காலமாகி விட்டார்.பட நிறுவனம் அதிர்ச்சி அடையவே, அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் பாக்கி பணிகளை விஸ்வநாதன், ராமமூர்த்தி முடித்துக்கொடுத்து படத்தின் மாபெரும் வெற்றிக்கு வழிகாட்டினர்,இப்படத்தில் விஸ்வநாதன் போட்ட “உலகே மாயம் பாடல் ரசிகர்களை மாயவலையில் சிக்கவைத்தது என்றால் மிகையாகாது.
அக்காலத்தில் இப்படத்தின் பாடல்களை  ரசிகர்கள் பித்துப்பிடித்தது  போல் ரசிக்கத்தொடங்கினர்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் ஒரே படத்தின் மூலம் ஒரே நாளில் தமிழகத்திரையுலகில் உச்சம் தொட்டனர். பின்னர் மக்கள் திலகத்தின்”குலேபகாவலி,”எம்.ஆர். ராதாவின் “ரத்தக்கண்ணீர் “போன்ற பிரபல நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பு வழங்கும் அளவுக்கு  தனது ஆற்றலை வளப்படுத்திக் கொண்டது இக் கூட்டணி. 1952 இலிருந்து 1965 வரை இக்கூட்டணிதான் தமிழ்த்திரையுலகின் இசையில் பெரும் பங்கு வகித்தது,நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் “பாலும் பழமும்”பாசமலர், பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், போன்ற பீம்சிங்கின் மகத்தான வெற்றிகளைப் பெற்ற படங்களுக்கும்,மக்கள் திலகத்தின், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை,  ஏவிஎம் தயாரித்த “அன்பே வா” “நம்நாடு “போன்ற படங்களுக்கும் இசையமைத்து,இமாலய வளர்ச்சி கண்டது ,”எங்க வீட்டுப்பிள்ளை “படத்தின் அபார வெற்றியினால் மனம் மகிழ்ந்த எம்..ஜி.ஆர். தனது  ராமாவரம் வீட்டுக்கு விஸ்வநாதனை வரவழைத்து விருந்தோம்பல் ஆற்றி ஒரு சாக்குப்பையில் பணத்தை கத்தை கத்தையாக  திணித்து வழங்கினாராம் .இந்நிகழ்வை விஸ்வநாதன் அடிக்கடி நெகிழ்வுடன் கூறுவதுண்டு.சிவாஜிக்கு அமைந்த வெற்றிக்கூட்டணி போல் வேறு நடிகர்களுக்கு அமையவில்லை என்றே சொல்ல வேண்டும்.”கண்ணதாசன் பாட்டெழுத,  விஸ்வநாதன் இசைக்க,சௌந்தரராஜன் பாட,சிவாஜி கணேசன் நடிக்க”,என்ற வார்த்தை பழமொழி போல் ஆனது, சமூகப்படங்களுக்கு மட்டும் அல்லாது பல புராணப்படங்களுக்கும் இவர்கள் ஆற்றிய இசைப்பணி அபாரமானதாகும்.பி.ஆர். பந்துலு தயாரித்து இயக்கி நடிகர்
திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த “கர்ணன் “என்ற மஹா காவியத்தில் இவர்கள் செய்த இசை வேள்வியை இன்றளவிலும் யாராலும் செய்ய முடியாத உன்னத கைங்கரியமாகும் ,வட நாட்டுப்பாணியில்  இப்படத்திற்கு இவர்கள் கொடுத்த பின்னணி இசைக்கோர்வை மற்றும் பாடல்கள் அபாரம் அபாரம்,இப்படத்தில் இடம்பெற்ற “மழை கொடுக்கும் கொடையும் ஒரு,,,,உள்ளத்தில் நல்ல உள்ளம்,,  மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா,,,போன்ற வைகளும், போர்க்காட்சியில் கொடுத்த பின்னணி இசையும் எந்தபடத்திலும் இனி அமையப்போவதில்லை, “கர்ணன்”படத்தின் இசையமைப்பை கேள்வியுற்ற ஹிந்தி திரையுலக இசை ஜாம்பவானும் விஸ்வநாதனின்  மானசீக குருவுமான இசையமைப்பாளர் நவ்ஷாத் நேரிலே பாராட்டியதை விஸ்வநாதன் ராமமூர்த்தி வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும்.இதே போல் இவர்களின் இசையில் வாலிபக்கவிஞர் வாலி மக்கள் திலகத்தின் படங்களுக்கு எழுதிய பாடல்கள் பின்னாளில் எம்.ஜி.ஆர். இன் அரசியல் களத்திற்கு அபாரமாக வித்திட்டது,”நான்ஆனையிட்டால் அது நடந்து விட்டால்”என்ற பாடல் எம்.ஜி.ஆரின் கழக பிரச்சார பாடலாகவே மாறியது. இக்கூட்டணியின் இசையில் “படகோட்டி “படப்பாட்டுகளும், “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் “போன்ற பாடலும் மக்கள் திலகத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து தேர்தல் காலங்களில் கூட ஓர் புரட்சியை ஏற்படுத்தியது, நிலவை வர்ணிக்கும் போது எவ்வாறு வானமும் அதற்குள் வருமோ, அதே போல் விஸ்வநாதனை பற்றி பேசும்போது கவியரசு கண்ணதாசனும் இதற்குள் வருவார்,இவர்களது இணயில் வெளிவந்த எண்ணிலடங்கா பாடல்கள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளை கடந்தாலும் அழியாத பொக்கிஷமாக திகழும் என்பதில் ஐயமில்லை, இயற்கை சில நேரங்களில் சில அதிசயங்களை ஆற்றும், அதில் ஒன்றுதான் இசையால் இணைந்த கண்ணதாசனும் விஸ்வநாதனும் பிறப்பினாலும் ஒன்றாய் இணைந்தவர்கள். ஆம்,இருவர் பிறந்த நாளும் ஒரே நாள், வருடம் தான் வேறு. விஸ்வநாதன் கண்ணதாசனை விட ஒரு வயதில் இளையவர். இலங்கைக்கும் விஸ்வநாதன் விஐயம் செய்து இசைக்கச்சேரி ஆற்றினார், பல வெளிநாடுகளிலும் இசை கச்சேரி செய்த பெருமை இவருக்குண்டு, சில நேரங்களில் கண்ணதாசனை இசையால் வம்புக்கு இழுப்பார் விஸ்வநாதன், அப்படி ஓர் நாள் வாஹினி ஸ்டுடியோவில் ஓர் ஓய்வு நேரத்தில், எல்லா வார்த்தைகளிலும் மே,,,என்று முடியும் வண்ணம் ஒரு பாடலை உடனே எழுத முடியுமா என விஸ்வநாதன் கேட்க ஐந்தே நிமிடத்தில் ஒரு பாட்டை எழுதினார் கண்ணதாசன், பின்னாளில் அப்பாடல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 175வது படமாகிய “அவன்தான் மனிதன்”படத்தில் விஸ்வநாதனின் இசையில்  இடம் பெற்றது,”அன்பு நடமாடும் கலைக்கூடமே,,,ஆசை மழை மேகமே,,,,என்ற பாடல் தான் அது,பல பாடல்களை நொடிப்பொழுதில் இயற்றிய கண்ணதாசனுக்கும் சில நேரங் நேரங்களில் சோதனைகள் ஏற்பட்டதுண்டு,சிவாஜிகணேசனின் சொந்தத்தயாரிப்பான “புதிய பறவை”யில் கிளைமேக்ஸ் காட்சிக்காக முக்கியமான ஓர் பாடலை வைக்கவேண்டும் என படத்தின் இயக்குனர் தாதா மிராஸி கேட்டுக்கொண்டார், இப்படத்தின் வெற்றிக்கு இப்பாடல் பெரிதாக அமையும்,என்ற எண்ணத்தில் காட்சியை கண்ணதாசனுக்கு விளக்கினார்கள்.கண்ணதாசனும் விஸ்வநாதனும் செய்வதறியாது மண்டையைக் குடைந்த வண்ணம் நாட்களை கடத்தினர் .பொறுமையிழந்த சிவாஜிகணேசன் ஒரு கட்டத்தில்  பாடல் ரெக்கார்டிங் செய்யும் இடத்திற்கே வந்து இருவரையும் சகட்டு மேனிக்கு பிழிந்தெடுத்துவிட்டார், அப்போது  கோபத்தில் இருந்த சிவாஜி காட்சியை நடித்து காட்டி ,அப்பா கவிஞ்ஞா நன்றாக கவனி, செத்தவள் மீண்டும் வந்து தொல்லை கொடுக்குறாள்(சௌகார் ஜானகி)  கோபால் (சிவாஜி கணேசன்)என்ற  கதாபாத்திரத்திரம் எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்ற நிலை கொள்ளாமல் அங்கும் இங்கும் அலைகின்றது,என கோபத்தில் விளக்கவே, உடனே கண்ணதாசன் இதோ பாடல் ரெடி என சிவாஜி கோபத்தில் சொன்ன வரிகளையே முதல் வரிகளாய் கொண்டு பத்தே நிமிடத்தில் பாடலை பின்னி விட்டார், பாடல் வரிகள் சிவாஜி எதிர்பார்த்ததற்கு மேலாக அமைந்த சந்தோஷத்தில் கண்ணதாசனைக் கட்டியணைத்து பாராட்டியோடு  விஸ்வநாதனிடம் ஒரு வரி கூட மாறாமல்  சௌந்தரராஜனை பாடச்சொல் என்றார், ஆங்கிலப்படத்தில் கூட இடம் பெறாத ஓர்  அருமையான மெட்டில் பல நூற்றுக்கணக்கான வாத்யங்களை கொண்டு உருவான பாடல் தான் “எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் “என்ற காலத்தால் அழியாத சாகா வரம் பெற்ற பாடலாகும்,ஸ்ரீதரின் “நெஞ்சம் மறப்பதில்லை”படத்திலும் இப்படி ஓர் நிலை இருவருக்கும் ஏற்பட்டது, அப்பாடலை உருவாக்க 23 நாட்கள் சென்றது, பிறகு படத்தின் தலைப்பையே பாடலின் முதல் வரியாக கொண்டு ‘நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை”என்ற இனிய பாடல் உருவானது, படமும் வெற்றி கண்டது ,
1952 இலிருந்து 1965 வரை 13வருடங்களாக தமிழ்த்திரையிசையை கோலோச்சிய இரட்டையர்கள் எதிர்பாராமல் பிரிந்து செல்லும் சூழல் ஏற்பட்டு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இவ்விடயத்தில் மிகவும் வேதனைப்பட்டவர் சிவாஜி கணேசனே, சிவாஜி, எம். ஜி. ஆர், கருணாநிதி. எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி, ஏவிஎம்  போன்ற திரையுலக ஜாம்பவான்கள் எவ்வளவோ சொல்லியும் பிரிந்தவர்கள் பிரிந்தவர்களே, ஒரு மரத்தின் கிளையில் கூடுகட்டி வாழ்ந்த இரு இசைக்குயில்கள் வேறு வேறு திசைகளில் பறக்கத்தொடங்கியது,  தொழில் ரீதியில் இவர்கள்  பிரிந்தாலும் இறுதி வரை ஒரு குடும்பம் போல் இணைந்திருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே,  மக்கள் திலகம் எம்ஜியாரின் மகத்தான சொந்தத் திரைப்படமான “உலகம் சுற்றும் வாலிபன் “இப்படத்திற்கு முதலில் இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டவர் பிரமாண்டமான இசையமைப்பாளர் என அந்நாளில் பேசப்பட்ட வயலின் மேதை குன்னக்குடி வைத்யநாதன்  அவர்களே,பின் கண்ணதாசன் எம்ஜியாரிடம் ஒரு யோசனை கூறினார் ,மிகுந்த பொருட்செலவில் படத்தை வெளிநாடுகளில் சென்று எடுக்கிறீர்கள்,குறிப்பாக தாய்வான்,சிங்கப்பூர். ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றவாறு பின்னணி இசையில் சந்தம் இருக்க வேண்டியது அவசியம்,குன்னக்குடிக்கு அந்த அனுபவம் பெரிதும் கிடையாது எனவே தம்பி விஸ்வநாதனே இதற்கு பொருத்தமானவர் என கூறிய பின் கவிஞர் கண்ணதாசன் சொன்னதன் பேரில் விஸ்வநாதனுக்கே அந்த வாய்ப்பை வழங்கினார் மக்கள் திலகம் ,படத்தின் விறுவிறுப்பும்,விஸ்வநாதனின் இசையமைப்பும் படத்தின் அமோக வெற்றிக்கு வித்திட்டது, இதே போல் ஓர் அனுபவம் விசுவநாதனுக்கு இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் மூலம் கமல் ரஜினி நடித்த “நினைத்தாலே இனிக்கும் “படத்தில் ஏற்பட்டது,படத்தின் பெரும் பகுதி சிங்கப்பூரில் படமாக்கப்பட்டது, இப்படத்தை கே பாலச்சந்தர் முழுக்க முழுக்க இசையையும்,இசையமைத்த விஸ்வநாதனையுமே நம்பி  எடுத்து மாபெரும் வெற்றி படமாக்கினார்.இப்படத்தின் வெள்ளிவிழாவின் போது கே. பாலச்சந்தர்,இப்படத்தின் முழு வெற்றிக்கும் காரணம் விஸ்வநாதனின் இசையே எனக்கூறி விஸ்வநாதனைப் பாராட்டினார்,
பல வருடங்களுக்கு பின் சத்யராஜின் “எங்கிருந்தோ வந்தான்”படத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி  இருவரும் இணைந்து இசையமைத்து தமது மலரும் நினைவுகளை மீட்டெடுத்தனர். எம்.எஸ்.வி.தனியாக தனது இசை பயணத்தை தொடர்ந்து சுமார் 700 இற்கும் மேற்பட்ட  பல தலைமுறை நடிகர்களின் திரைப்படங்களுக்கு  இசை ஆற்றி பல சாதனைகளை புரிந்துள்ளார்.1975 வரை விஸ்வநாதன் இசையில் பாடாத பாடகர்களே இல்லை, தென்னகத்தில் இருந்த அனைத்து இயக்குனர்களையும் இசையால் இயக்கியவர் விஸ்வநாதனாகத்தான் இருக்கக முடியும்ஷ
.இவரிடமுள்ள சிறப்பான குணம், எவ்வளவு பெரிய நடிகர்களாக இருந்தாலும் சாதாரண நடிகர்களாக இருந்தாலும் பாடல்களை திறம்பட இசையமைத்துகொடுப்பார், அறிமுக இசையமைப்பாளர்களை பெரும்பாலும் ஊக்குவித்தவர் விஸ்வநாதனே, வாலிபக்கவிஞர் வாலி வாழ்விலும் விளக்கேற்றியர் விஸ்வநாதன்,வாலி அடிக்கடி கூறும் வார்த்தை “ஒரு வேளை சோத்துக்கே வக்கில்லாமல் இருந்த எனக்கு விஸ்வநாதனின் அறிமுகம் கிடைத்தபின் சோறு திங்கவே நேரமில்லாமல் போய்விட்டது.