முதலமைச்சர் மத்திய அமைச்சருக்கு கடிதம்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்

Spinal Muscular Atrophy எனப்படும் முதுகெலும்பு தசை செயலிழப்பு நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

குழந்தைகளை பாதிக்கும் இந்த அரியவகை மரபணு நோயால் தமிழகத்தில் ஆண்டுக்கு 90 முதல் 100 பேர் ஆளாவதாக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இந்நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்துகளின் விலை 16 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும் முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான சுங்கவரி மற்றும் ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட இதர வரிகளில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்

செய்தி: S.MD. ரவூப்