திருக்கோவிலின் பிரதான வாசல்!
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள்!
திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோவிலுக்குள்
செல்ல வேண்டும்.
அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக்
கூடாது.
கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம்
கழித்து கை, கால்கள் கழுவலாம். குளிக்கக் கூடாது.
எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோவிலில் மட்டுமே
ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.
சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு
சேர்க்கக் கூடாது. அதுவே மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.
சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.
நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய்
பற்றிப் பேசக் கூடாது.
மருதாச்சலம், செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ்.