டெல்லியில் குடிநீர் நெருக்கடி

அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் விரட்டியடிப்பு.

டெல்லியில் குடிநீர் நெருக்கடிக்கு தீர்வு காண கோரி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர்.

புதுடெல்லி,

டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்த சூழலில், டெல்லியில் கோடையை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலை ஏற்பட்டது.

வடஇந்தியாவில் ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. எனினும் டெல்லியில் இன்னும் மழை பொழிவு இல்லை. இன்று மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

டெல்லியில் பல பகுதிகளிலும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜ.க. தொண்டர்கள் அரசுக்கு எதிராக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். எனினும், அதனை பா.ஜ.க.வினர் ஏற்கவில்லை. போலீசாரின் எச்சரிக்கையை மீறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வேறு வழியின்றி போலீசார் பா.ஜ.க.வினர் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து அவர்களை அந்த பகுதியில் இருந்து விரட்டியடித்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர்.M G. தமீம் அன்சாரி