ஏழை மக்களுக்கு உதவும் ‘ஆட்டோ ஆம்புலன்ஸ்’ ..

தமிழ்நாடு முழுவதும் இந்த சேவை தொடங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார் ஆட்டோ ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இஸ்மாயில்.

குன்னூர் அரசு மருத்துவமனை வாசலில் மூதாட்டியையும், அவரது உறவினரையும் ஆட்டோவில் இருந்து மெதுவாக இறங்க வைத்தார் ஓட்டுநர் இஸ்மாயில். அடுத்த சிலநிமிடங்களில் சிடி ஸ்கேன் எடுக்கக் கூட்டிச் செல்லுமாறு நோயாளி ஒருவர் கேட்க, அவரை ஆட்டோவில் அமரவைத்து கிளம்பினார் அவர்.