அமெரிக்கப் படைகளுக்கு அழைப்பு..
உள்நாட்டுப் பாதுகாப்புக்காக அமெரிக்கப் படைகளுக்கு அழைப்பு!
கரீபியன் பெருங்கடல் நாடான ஹைட்டியில் அதிபா் படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்டுள்ள பதற்ற சூழலில் உள்நாட்டுப் பாதுகாப்புக்காக அமெரிக்கப் படைகளுக்கு அந்த நாட்டு இடைக்கால அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளரிடம் ஹைட்டி இடைக்கால அதிபா் கிளாட் ஜோசப் தெரிவித்துள்ளார்.
நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் ஐ.நா. படைகளை அனுப்ப வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியான தகவல்கள் உண்மையே.
இந்த இக்கட்டான சூழலில் நாட்டின் நிலைத்தன்மையைப் பாதுகாக்க எங்களுக்கு சா்வதேச உதவி தேவைப்படுகிறது. அதற்காக நட்பு நாடுகளை நாங்கள் அணுகியுள்ளோம்.
தற்போது ஹைட்டியில் நிலவி வரும் அசாதாரண சூழலை சமாளிப்பதில், தேசிய காவல்துறைக்கு சா்வதேச நட்பு நாடுகள் உதவ செய்ய முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்.
அதிபா் ஜோவனேல் மாய்ஸ் படுகொலையை சாதகமாகப் பயன்படுத்தி, நாட்டின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற எதிா்க்கட்சிகள் முயற்சி செய்வது வேதனை அளிக்கிறது. எனக்கு இதுபோன்ற பதவிப் போட்டியில் நாட்டமில்லை.
ஹைட்டியின் அதிபராக வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி, தோதலாக மட்டுமே இருக்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, அதிபா் ஜோவனேல் மாய்ஸைப் படுகொலை செய்தது வெளிநாட்டுக் கூலிப் படையினா் என்று போலீஸாா் அறிவித்தனா். இதுதொடா்பாக கொலம்பியா ராணுவத்தின் முன்னாள் வீரா்கள் 15 போ, அமெரிக்க குடியுரிமை பெற்ற 2 ஹைட்டி நாட்டவா்கள் கைது செய்யப்பட்டனா். கைது நடவடிக்கையின்போது 3 போ கொல்லப்பட்டனா்.
இந்த வழக்கில் மேலும் 8 பேரைத் தேடி வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
அதிபா் ஜோவனேல் மாய்ஸும் (53), அவரது மனைவியும் அவா்களது இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு படுகொலை செய்யப்பட்டனா்.
அதையடுத்து, ராணுவம் மற்றும் காவல்துறையின் ஆதரவுடன் பிரதமா் கிளாட் ஜோசப் நாட்டின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றாா்.
தொழிலதிபராக இருந்து வந்த ஜோவனேல் மாய்ஸ், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தேர்தலில் போட்டியிட்டாா்.
அந்தத் தோதலில் அவருக்கு 6 சதவீத வாக்குகளே கிடைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்த நிலையில்,
32.8 சதவீத வாக்குகளைப் பெற்று அவா் முதலாவதாக வந்தாா்.
இதனால் தோதலில் முறைகேடுகள் நடைபெற்ாக நாடு முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. அதையடுத்து 2-ஆவது சுற்றுத் தோதல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
எனினும், முதல் சுற்றுத் தோதலின் மாய்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோதலில் 55.67 சதவீத வாக்குகளைப் பெற்று ஜோவனேல் மாய்ஸ் வெற்றி பெற்றாா்.
அவரது ஆட்சியின்கீழ் ஹைட்டியில் பொருளாதாரம் சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டிய எதிா்க்கட்சியினா், எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த 2018-ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அதனைத் தொடா்ந்து ஊழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஜோவனேல் மாய்ஸை பதவி விலக வலியுறுத்தி தற்போது வரை போராட்டங்கள் தொடா்ந்து வந்தன.
இந்தச் சூழலில், மனைவியுடன் அவா் படுகொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக வெளிநாட்டுக் கூலிப்படையினா் கைது செய்யப்பட்டுள்ளதால், சா்வதேச சதித் திட்டத்தின்கீழ் மாய்ஸ் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சிலா் சந்தேகம் எழுப்பியுள்ளனா்
செய்தி: K.N. ஆரிப்