சீனா மீது பொருளாதாரத் தடை..

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சீனாவுக்கு பொருளாதார தடை விதிக்க தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது!

சீனா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அறிக்கையின் படி, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய வெளியுறவுக் குழு, சின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகக் கூறி தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

சீன நாட்டிலிருந்து பருத்தி இறக்குமதியை நிறுத்திவைக்கவும், பெய்ஜிங்கில் 2022 குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களை புறக்கணிக்கவும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற வெளியுறவுக் குழு பரிந்துரைத்துள்ளது.

செய்தி: S.MD. ரவூப்