வெடித்து சிதறிய கண்டெய்னர் கப்பல்..

துபாய் துறைமுகத்தில் வெடித்து சிதறிய
கண்டெய்னர் கப்பல்!

உலகின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான துபாய் துறைமுகத்தில் கண்டெய்னர் கப்பல் வெடித்து சிதறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் கடல்வழி போக்குவரத்தில் மிகப்பெரிய துறைமுகங்களில் முக்கியமான ஒன்றாக இருப்பது துபாயில் உள்ள ஜெபல் அலி துறைமுகம்.

இந்த துறைமுகத்தில் ஏராளமான கப்பல்கள் நின்ற நிலையில் திடீரென கண்டெய்னர் கப்பல் ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டது.

இதனால் வான உயரத்திற்கு நெருப்பும், கரும்புகையும் எழுந்தது.

சுமார் 25 கிலோ மீட்டர் அப்பாலும் இந்த வெடிவிபத்தின் காட்சிகள் தெரிந்த நிலையில், துறைமுகங்கள் அருகில் இருந்த கட்டிடங்கள் வெடிவிபத்தின் அதிர்ச்சியால் குலுங்கியதாகவும், கண்ணாடி ஜன்னல்கள் அதிர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் ஏற்பட்ட சேதாரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் வெடிவிபத்து நிகழ்ந்த சில நிமிடங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக துபாய் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

செய்தி; S.MD. ரவூப்