அடுத்த ஆண்டு கோடையில் இயங்க உள்ள ஜெட் ஏர்வேஸ்!!

ஜெட் ஏர்வேஸ் புதிய உரிமையாளரான முராரி லால் ஜலன் மற்றும் கல்ராக் கேபிடல்ஸ் மீண்டும் சேவையை தொடங்க தேசிய நிறுவன தீர்ப்பாயத்திடம் ஒப்புதல் கோரி உள்ளனர்.

இந்தியாவின் தனியார் விமானச் சேவையில் மிகவும் பெரிய அளவில் இயங்கி வந்தவற்றில் ஒன்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கடன் அதிகரிப்பால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டது. இதைச் சீரமைக்க எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்து தினசரி செலவுக்கும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதை அடுத்து சேவைகள் 2019 ஆம் வருடம் ஏப்ரல் 17 முதல் முழுமையாக நிறுத்தப்பட்டன.

M.G. தமீம் அன்சாரி செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.