பதிலடி கொடுப்போம் – ஜோ பைடன்

ரஷ்யாவிலிருந்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களை தடுக்க அமெரிக்கா போதிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தெரிவித்துள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.அமெரிக்க அரசின் தரவுகளின்படி இவற்றில் பெரும்பாலானவை ரஷ்யாவிலிருந்து நிகழ்த்தப்படுகின்றன. ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகளுக்கு தெரிந்தும், சில நேரங்களில் அவர்களின் ஒப்புதல் உடன் நடத்தப்படுவதாக அமெரிக்க அரசு கூறுகிறது.கடந்த மாதம் ஜெனிவாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தபொழுது தாக்குதலுக்கு உள்ளாகக்கூடாத 16 துறைகளின் பட்டியலை புதின் தலைமையிலான ரஷ்ய அரசு அதிகாரிகளிடம் அளித்தார் பைடன்.