மாணவர்களின் ஆன்லைன் வகுப்பிற்காக – கேட்ஜட் வங்கி.

மாணவர்களின் ஆன்லைன் வகுப்பிற்காக ’கேட்ஜட் வங்கி’- ஜார்க்கண்ட் காவல்துறையின் அசத்தல் முயற்சி. பெரும்பாலான பள்ளிகள் கடந்த கல்வியாண்டில் ஆன்லைன் வகுப்புகள் வழியே தொடங்கிய போது, அனைவருக்கும் அதைப் பயன்படுத்தும் வாய்ப்பு இல்லாமல் போனது. வசதி வாய்ப்புகள் இல்லாத வறுமை கோட்டுக்குக் கீழே இருக்கும் பல மாணவர்களுக்கு, ஒரு மொபைல் போன் அல்லது வகுப்புகளில் கலந்து கொள்வதற்கான சாதனங்கள், வாங்க முடியாத நிலை உள்ளது.. மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்கள் வங்கி உருவாக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. இந்த சாதனங்களை சரிசெய்து இந்த குழந்தைகளுக்கு விநியோகிக்கும் ஒரு மின்னணு கேட்ஜட் வங்கியை விரைவில் உருவாக்கவுள்ளது. இதனால் அவர்கள் ஆன்லைன் வகுப்புகளிலும் பங்கேற்க முடியும். இதுகுறித்து ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.