இளைஞர்களை காப்பாற்றுங்க ராமதாஸ் வேண்டுகோள்!
தமிழ்நாட்டில் போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் இளைஞர்கள் பலர் கூட்டமாக அமர்ந்து போதை ஊசியை உடலில் செலுத்திக் கொள்ளும் காணொலிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
இந்தக் காட்சியைக் கண்ட அனைவரும் இன்றைய இளைய தலைமுறையினரின் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கவலைக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகியிருப்பார்கள் என பா.ம.க தலைவர் ராமதாஸ் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளார்.