மாநகர பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சீட்டு வெளியீடு!!!!
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதற்கு பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களுக்கும் கட்டணமில்லா பயணம் என்ற அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன் அடிப்படையில் ஜூன் 3ஆம் தேதி முதல் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பயணிக்க கட்டணமில்லா பயணச்சீட்டு என்று அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
A அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்