என் அன்பு தம்பி எம்.ஜி. ராமச்சந்திரன்
அறிஞர் அண்ணா அவர்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த பின் 1968 இல் சட்டமன்றம் நடந்து கொண்டு இருந்த நேரத்தில்..
காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அனந்த நாயகி அவர்கள் கேள்வி நேரத்தில் அறிஞர் அண்ணா அவர்களை நோக்கி முதல்வர் அவர்களே..!
நீங்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பியதில் எவ்வளவு பணம் செலவு ஆனது அது உங்கள் சொந்த பணமா அல்லது அரசு பணமா அல்லது உங்கள் கட்சி செலவா என்று கேட்க.
அறிஞர் அண்ணா அவர்கள் சபையை சுற்றி பார்த்து உங்கள் இந்த கேள்விக்கு நாளைக்கு நான் பதில் சொல்கிறேன் என்ற உடன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஒரு மாதிரியாக சிரித்தனர்.
மறுநாள் சட்டப்பேரவை கூடியதும் அதே கேள்வி நேரத்தில் நேற்று எனது கேள்விக்கு என்ன பதில் என்று அவர் மீண்டும் கேட்க.
அறிஞர் அண்ணா அவர்கள் எனது சிகிச்சை முழு செலவையும் நானும் கொடுக்கவில்லை.
தமிழக அரசும் கொடுக்கவில்லை.
எங்கள் கட்சியும் அந்த செலவை ஏற்கவில்லை.
செலவான தொகை ரூபாய் ஒரு லட்சத்து இருப்பது ஐயாயிரம் ரூபாய் மொத்தமும் இங்கே…,
இதோ சட்டமன்ற உறுப்பினர் ஆக அமர்ந்து இருக்கிற என் அன்பு தம்பி எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள்…,
அவரின் உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தை எனக்காக என் சிகிச்சைக்காக செலவை அவரே ஏற்று கொண்டு பணம் செலுத்திய ஆதாரம் இதோ….
நேற்று அவர் அவைக்கு வரவில்லை அவர் முன்னால் இந்த விளக்கத்தை சொல்ல வேண்டும் என்று எண்ணியே நேற்று நான் பதில் சொல்லவில்லை என்ற உடன் சட்டமன்ற அவையில் எழுந்த கரவொலி கட்டிடம் தாண்டி கேட்டது.
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் முகத்தில் சோகம் சூழ்ந்தது…
எங்கும் வந்து நிற்கும் எம்ஜிஆர் ஒருவரே என்பது அவர்களுக்கு அன்றும் இன்றும் என்றும் புரிந்த காலம் அது.
பட்டினியில் கிடந்த போதும் சரி பணம் மழை போல அவர் வாழ்வில் கொட்டிய போதும் தன்னிலை தவறாத ஒரே தலைவன்..
அந்த ஈகைக்குணம் நிறைந்திருந்தால் தான் ஈழத்திற்கும் உதவ முடிந்தது…
அறிஞர் அண்ணா அவர்களுக்கு சிகிச்சை தொகையை ஏற்று கொண்டதாக ஒரு போதும் ஒரு நாளும் ஒரு இடத்தில் கூட சொன்னது இல்லை…
அறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன பிறகே நாட்டுக்கு இந்த உண்மை தெரிந்தது என்பதை நினைவில் கொள்ளவும்..
மூலப்பதிவு: Pavala Kula கிருஷ்ணசாமி
நன்றி ஹயாத்