கொரோனா ஊரடங்கால் ஜவுளிக்கடை வியாபாரிகள் பாதிப்பு :
ஜவுளி தொழிலில் பல கோடி நஷ்டம்வண்ணாரப்பேட்டையில், ஜவுளி வியாபாரிகள் சங்க நிர்வாகி சரவணன், பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:சென்னையில் கொரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்துள்ளதால், அரசு தளர்வுகள் அளித்து, பல்வேறு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், ஜவுளி கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து, வண்ணாரப்பேட்டை, எம்.சி., ரோட்டில், 2,000த்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள், ஊரடங்கு தடை உத்தரவால், 45 நாட்களாக மூடப்பட்டுள்ளன.இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும், 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 நாட்கள் ஜவுளி கடை மூடப்பட்டிருப்பதால், வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர் செய்தியாளர் தமிழ் மலர் அப்துல் ரசாக்