ஹால் டிக்கெட் கொடுக்காமல் தேர்வு நடத்த திட்டம் – புதுக்கல்லூரி
சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள புதுக்கல்லூரியில் சில நாட்களுக்கு முன்பாக ஒரு அறிவிப்பு வெளிவந்தது.
அதில் இந்த கொரோனா சூழலில் மாணவர்கள் அதாவது 2007 ஆம் ஆண்டு முதல் தேர்வு எழுதி தேர்வாகாத மாணவர்களும் கூட இந்த ஆண்டு தேர்வு எழுதி தங்களது பட்டத்தை வாங்கி கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
இதை தொடர்ந்து மேலும் சில நாட்களுக்கு பிறகு இதே கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த இயலாதவர்களுக்கு பரிசீலனை செய்கிறோம் என்றும் மாணவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பினை தருகிறோம் என்ற உறுதியையும் அளித்தது.
இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களது படிப்பை தொடர முடியாது போனவர்களும் முயற்சி செய்து கொண்டிருக்க இம்மாதம் நேற்று புதுக்கல்லூரியின் வலைதளத்தில் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டது இதில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்விற்கு கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் தேர்வுக்கான தேதியை புதுகல்லூரியானது அறிவிப்பை வெளியிட்டது.
இதனால் புதுக்கல்லூரியின் மீது அளவற்ற மதிப்பை வைத்திருந்த மாணவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டது.
இதனால் நேற்றைய தினம் மாணவர்கள் புதுக்கல்லூரியின் நுழைவாயில் முன்பு போராட்டத்தை கொரோனாவின் வழிமுறைகளை பின்பற்றி நடத்தினர்.
ஆகையால் புதுக்கல்லூரியானது இதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நிர்வாகத்தை நம்பி ஏமாந்து போன மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- செய்தியாளர்
ரசூல் மொய்தின்.