கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ. 25 லட்சம் நிதியுதவி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி 25லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
சென்னை
கொரோனா பேரிடரை எதிர்கொள்ள தாராளமாக நிதி வழங்கிட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்று தனிநபர், தொழில் நிறுவனங்கள் மற்றும் திரையுலகினர் என ஏராளமானோர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதியும் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 25லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சரை சந்தித்த விஜய் சேதுபதி நிவாரண நிதியை வழங்கினார்
செய்தியாளர்
ரஹ்மான் தமிழ்மலர் மின்னிதழ்