திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மதுவிலக்கு போலீசார் அதிரடி

மதுவிலக்கு கடத்திய திமுக பிரமுகர் கைது. மூன்று அட்டை பெட்டிகளில் 144 மது பாட்டில்கள், சொகுசு கார் பறிமுதல்
மணப்பாறை காவல் உட்கோட்டத்தில் தொடர்ந்து கள்ள சாராயம் பழச்சாறு ஊறல்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு தனிப்படை போலீசார் கண்டறிந்து நிகழ்விடத்திலேயே அழித்து வருகின்றனர், மேலும் நேற்றுவரை வெளிமாநில மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்தும் வந்துள்ளனர், இதனை தொடர்ந்து முசிறி மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சிவராமன் தலைமையிலான போலீசார் நேற்று மணப்பாறை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலை அடுத்து வளநாடு காவல் சரகத்துக்கு உட்பட்ட தேனுர் -உனையூர் சாலையில் வந்த கரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 3 அட்டை பெட்டிகளில் 144 வெளிமாநில மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கபட்டது, அதனை தொடர்ந்து மதுபாட்டில்கள் மற்றும் கரை பறிமுதல் செய்த போலீசார் மதுபாட்டில் எடுத்து வந்த சுற்றுபுறம் கொடும்பபட்டியை சேர்ந்த துரைசாமி மகன் ராமு(30) என்பவரை போலீசார் கைது செய்தனர்,

P.பாலு மணப்பாறை செய்தியாளர்