இரயில்வே துறை அறிவிப்பு – சென்னையில் இன்று முதல் கூடுதலாக மின்சார இரயில்கள் இயக்கம்

சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரெயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரெயில் சேவையும் என 323 மின்சார ரெயில் சேவை இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டமும், மின்சார ரயில் சேவையை அதிகரித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 7-ம் தேதி முதல் 208 ஆக இருந்த மின்சார ரயில் சேவையின் எண்ணிக்கையை, 279 ஆக சென்னை ரயில்வே கோட்டம் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று முதல் மேலும் கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 113 மின்சார ரயில் சேவையும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 60 சேவையும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரயில் சேவையும் என 323 மின்சார ரயில் சேவை இயக்கப்படும். ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 4 மின்சார ரயில் சேவையும், பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 10 மின்சார ரயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் சென்னையில் 343 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும். மேலும் 20-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் 98 மின்சார ரயில் சேவைகளும் இயக்கப்படுகின்றன. சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் இன்று முதல் bub ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

-செய்தியாளர்
ரசூல் மொய்தீன்.