இரண்டாம் தவணை கொரோனா நிவாரணம் ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் :

முதல்வராக முக ஸ்டாலின் பொறுபேற்றதும் முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி 4000 வழங்கப்படும், அதில் உடனடியாக 2000 வழங்கப்படும் என கையெழுத்திட்டார்.

அதன்படி தமிழகத்தில் உள்ள அணைத்து ரேஷன் கடைகளிலும் மே மாதத்தில் முதல் தவணையாக 2000 வழங்கப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் முதல்வரும் தமிழக முதல்வரின் தந்தையுமான கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாம் தவணையாக 2000 தொகையும், 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கானத்தூர் ரெட்டிக்குப்பம் பகுதியில் ரேஷன் ஊழியர் திரு,வெங்கட் தலைமையில் அதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.

அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரிய