திருவண்ணாமலை; கொரோனாவுக்கு 13 பேர் பலி; 293 பேருக்கு தொற்று
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைய தொடங்கி உள்ளது. இருப்பினும் இந்த நோய் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று அரசு அறிவிப்பில் கொரோனா தொற்றுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 293 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை 45,600 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனா். இதில், 39,015 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர்.
தற்போது 6,070 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 515 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்மலர் செய்திகளுக்காக செய்தியாளர் மருதமுத்து