மனுவை ஏற்ற மாவட்ட ஆட்சியர்.. அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்

தமிழ்நாட்டில் கொரானா என்ற நோயினால் பாதிக்கப்படாமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். அதனால் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதுரை வாழ் கிராமிய நாட்டுப்புற கலைஞர்கள் மாவட்ட ஆட்சியர் திரு எஸ். அனிஸ் சேகர் என்பவரிடம் நாட்டுப்புற கலைஞர் மதுரை சக்தி கார்த்தி என்பவரால் மனு கொடுக்கப்பட்டது.. அந்த மனுவை ஏற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் CII Madurai Zone என்ற நிறுவனம் மூலம் இனைத்து கிராமிய நாட்டுப்புற கலைஞர்கள் 50 நபர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.. இதில் கலைஞர்கள் சந்தோஷம் அடைந்தனர்… தமிழ் மலர் செய்திகளுக்காக செய்தியாளர் நா.புவனேஷ்குமார்