மாமேதை அம்பேத்கர் 64ஆவது நினைவு தினம்

மாமேதை அம்பேத்கர் 64ஆவது நினைவு தினம் அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது. மாமேதை ஐயா டாக்டர் அம்பேத்கர் 64 வது நினைவு தினம் செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஐயா மாமேதை அம்பேத்கர் அவர்கள் திருவுருவ சிலைக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் B.முரளிதரன் அவர்கள் தலைமையில் மரியாதை செலுத்தினார்கள் மேலும் அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1700 மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள்.வரும்
2020- 2021 ஆம் கல்வி ஆண்டில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் உயர் நிலைப்பள்ளி என்று தனித்தனியாக பிரிக்கப்படும் என்றும். 11-ஆம் 12 ஆம் அனைத்து வகுப்பு அறைக்கும் ஸ்மார்ட் போர்டு அமைக்கப்படும் என்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் உறுதி அளிக்கிறோம் என்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் அனகை முரளிதரன் தெரிவித்தார். உடன் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.