தமிழக அரசு இ-பதிவு பெறப்படாத வாகனங்களை பறிமுதல் செய்தனர்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று சற்று குறைந்துள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின்
ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு தளர்வுகளுடன், ( 07/06/21 ) திங்கள் கிழமை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையில் நேர கட்டுப்பாடுடன் காய்கறி கடைகள்,மளிகை சாமான் கடைகள், மற்றும் எலக்ட்ரிக்கல் கடைகள், ஹார்டுவேர் கடைகள், இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடைகள், சாலையில் பூ வியாபாரம் செய்பவர்கள, செயல்படலாம் என அனுமதி அளித்திருந்தனர்

இந்நிலையில் கூலி தொழிலாளி சுயதொழில் செய்பவர்களின் நலத்தினை கருத்தில் கொண்டு வீட்டு வேலை செய்பவர்கள், எலெக்ட்ரிசியன்கள், பிளம்பர்கள், தச்சு வேலை செய்பவர்கள், கம்ப்யூட்டர் பழுது நீக்குபவர்கள், அனைவரும் தகுந்த அரசு இ-பதிவு பெற்று பணியில் ஈடுபடலாம் என தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் உத்தரவு அளித்திருந்தார்.

இந்நிலையில் கூலி தொழிலாளிகள், சுயதொழில் பணிக்கு செல்ல
தகுந்த அனுமதி அரசு
இ-பதிவு செய்யப்படாத வாகனங்களை செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் சங்கர் நகர் S-6 காவல் ஆய்வாளர் திருமதி/ மகுடீஸ்வரி ஆலோசனையில்
S-6 சங்கர் நகர் காவல் நிலைய
எல்லைக்கு உட்பட்ட அனகாபுத்தூர் மேம்பாலம் அருகில் S-6 சங்கர் நகர் காவல் உதவி ஆய்வாளர், கருப்பசாமி தலைமையில்
காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

தகுந்த தமிழக அரசு
இ- பதிவு அனுமதி பெறப்படாத இருசக்கர வாகனம் அத்தியாவசியம் இன்றி வெளியில் சுற்றுகின்ற வாகனங்களை பறிமுதல் செய்தனர். மற்றும் முக கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி கொண்டு வருபவர்களுக்கு அபராதமும் விதித்தனர்!

S.முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்