அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் திரு/ மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு !
தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் ( 06/06/21 ) வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களுக்கு covid-19 கொரோனா தொற்று ஏற்பட்டு சிங்கம் உயிரிழந்தது. இதனை தொடர்ந்து மற்ற சிங்ககளுக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளது.
இதை அறிந்த தமிழக முதல்வர் திரு/ மு.க ஸ்டாலின் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு நேரில் சென்று பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் சிங்கங்கள் முழுநலம் பெறுவதற்கும் பரவலை தடுப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் படி அதிகாரிகளுக்கு முதல்வர் திரு/ மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் மேற்கொண்ட ஆய்வில் உடன் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர், ஊரக தொழில்துறை அமைச்சர் திரு/ தா.மோ. அன்பரசன் மற்றும் வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், உடனிருந்தனர்
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்