ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

ரிசர்வ் வங்கி தலைமையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற கூட்டத்தில்வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.இந்த கூட்டம் இன்று நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் விடுத்த செய்திக்குறிப்பில் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும். ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் எந்த மாற்றமும் இல்லாமல் 3.35 சதவீதமாக நீடிக்கும்.மேலும் 2021-2022ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கலாம். இதற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா 2வது அலையின் தாக்கத்தினால் சரிந்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

A. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்