திரு/ செல்வராஜ் எளிய மக்களுக்கு அரிசி வழங்கினார்கள்

பொழிச்சலூர் புனித தோமையார் மலை வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பு குழு உறுப்பினர் திரு/ செல்வராஜ் எளிய மக்களுக்கு அரிசி வழங்கினார்கள்!

தமிழக முதலமைச்சர்
திரு / மு.க .ஸ்டாலின் அவர்களின் தந்தையும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் திரு/ கலைஞர் கருணாநிதியின் அவர்களின்
98-வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையர் மலை வடக்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் திரு/ செல்வராஜ் தலைமையில் திமுக கழக கொடியினை ஏற்றி முத்தமிழ் அறிஞர் திரு/
கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

கலைஞரின் 98- வது பிறந்தநாளில் ஏழை எளிய மக்களுக்கு
(5 கிலோ அரிசி) வழங்கினார்கள்.

கலைஞரின் 98 வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் ,
சிவசங்கர் நகர் கிளை செயலாளர் ராஜா, பொழிச்சலூர் ஊராட்சி ஆதிதிராவிட கிளைச் செயலாளர் வீரராகவன்,
நேரு நகர் கிளை செயலாளர், ராஜா மணி,
மற்றும் பொழிச்சலூர் திமுக கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு முத்தமிழறிஞர் திரு/
கலைஞர் கருணாநிதி யின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். S.முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்