கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பில் முகத்திரை, கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று வழங்கினார்.
✍கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த 24.05.2021 முதல் 07.06.2021 வரை தமிழக அரவு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அமலில் உள்ளது. இதனை அமல்படுத்தும் பணியில் தூத்துக்குடி சுமார் 2000 போலீசார் ஊரடங்கை அமல்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு சிரமமான சூழ்நிலையில் கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையினரின் பாதுகாப்புக்காக தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு ரூபாய் 5 லட்சம் செலவில் கொரோன தடுப்பு உபகரணங்கள் வழங்கியுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் பணிபுரியும் காவல்துறையினர் அனைவருக்கும் முகத்திரைகள், கையுறைகள், முகக் கவசங்கள், கிருமிநாசினிகள் மற்றும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று தூத்துக்குடி நகரம், தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், மணியாச்சி ஆகிய நான்கு உட்கோட்டங்களில் பணிபுரியும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.
✍இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், காவல் அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி பொது சிவஞானமூர்த்தி, அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர்கள் மயில்குமார், கணேசபெருமாள் மற்றும் தனிப்பிரிவு ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் குருநாதன்