சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில யோசனைகள்!

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில யோசனைகள்!

சுறுசுறுப்பாக இருப்பது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கிய வாழ்க்கை நடைமுறையை பின்பற்றுவது, நீண்டகால சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும். வழக்கமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவை கடந்து உயர் ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட்டால் அது சிறுநீரகங்களை பாதிக்கும். புகை, மது இந்த இரண்டையும் விட்டொழிப்பது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள்தான் அதிக அளவில் சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
உடலில் உள்ள செல்கள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை பயன்படுத்த முடியாதபோது ரத்தத்தை வடிகட்டுவதற்கு சிறுநீரகங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர்