அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர், நடமாடும் காய்கறி வண்டிகளை துவங்கி வைத்தனர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் நகராட்சி மற்றும் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் மாண்புமிகு பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மற்றும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமத் அவர்களும் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் நடமாடும் காய்கறி வண்டிகளை தொடங்கி வைத்தனர்,மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு 211, தூய்மை பணியாளர்களுக்கு காய்கறி உள்ளிட்ட தொகுப்புகள் வழங்கினார்கள், பின்பு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்று மணப்பாறை லயன்ஸ் கிளப் சங்கம் சார்பாக நோயாளிகளுக்கு போர்வைகள் வழங்கினார்கள், நோயாளிகள் நலன்குறித்தும், அவர்கள் தேவைகள் குறித்தும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர், முத்துகார்த்திகேயன் அவர்களிடம் அமைச்சர் விசாரித்தார் P. பாலு தமிழ்மலர் மணப்பாறை செய்தியாளர்