கர்நாடகா மதுபானங்களை கடத்தி வந்த 2- நபர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்து கிருஷ்ணகிரி டு மத்தூர் ரோடு கண்ணன்டஹள்ளி கூட்ரோடு அருகில் J.R நகர் என்ற இடத்தில் (29/05/2021) விடியற்காலை 04.30AM மணி அளவில் மத்தூர் காவல் உதவி சிறப்புப் ஆய்வாளர் திரு. கிருஷ்ணன் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற இருசக்கர வாகனங்கள் சோதனை செய்தனர் அப்பொழுது சந்தேகத்திற்கு ஆகும் வகையில் இருசக்கர வாகனத்தில்
சாமியானா துணியை எடுத்து வந்தனர் அதை சோதனை செய்தபோது அதில் 360 குவாட்டர் மது பாட்டில் மறைத்து வந்ததை கண்டுபிடிக்கப்பட்டது இதையடுத்து இருவரையும் விசாரித்ததில் திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் வினோத் (30) கபிலன் (17) இருவரும் கூலி தொழில் செய்பவர்கள் தெரியவந்தது இதை அடுத்து மத்தூர் காவல் நிலையத்தில் இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். செய்தியாளர் ரஹ்மான் தமிழ்மலர் மின்னிதழ்