ஸ்ரீநகரில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஸ்ரீநகர் துணை பிரதேச மாஜிஸ்திரேட் ஃபயாஸ் அஹ்மத் பாபா கூறுகையில்,
ஸ்ரீநகர் முழுவதும் 44 திறந்தவெளி தடுப்பூசி முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் தடுப்பூசி போட வற்புறுத்தி வருகிறோம்.
இந்த முகாம்கள் முக்கியமாக ஊடகவியலாளர்கள், கடை வைத்திருப்பவர்கள், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் தடுப்பூசிகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக மக்கள் மத்தியில் ஒரு வதந்தி பரவியது, ஆனால் இது உண்மையல்ல.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் ஷர்மீன் கூறுகையில்,
நாளொன்றுக்கு 300 பேருக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதுவரை 40 பேருக்குத் தடுப்பூசி போட்டுள்ளோம். மக்கள் ஒத்துழைத்து வருகின்றனர் என்றார்.
-செய்தியாளர்
செய்யது அலி