ஆசை மீடியா நெட்வொர்க் சென்னை மாவட்டம் சார்பாக சமூக பணிகள்

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. இந்நிலையில் ஏழை எளியோறுக்கு ஆசை மீடியா நெட்வொர்க் சார்பாக அணைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அதில் சென்னை மாவட்டம், திருவல்லிக்கேணி, நீலம் பாட்சா தர்கா குடிசை பகுதியில் அமைந்துள்ள ஏழை எளிய மக்களுக்கு நமது ஆசை மீடியா நெட்வொர்க், தமிழ் மலர் மின்னிதழ் சார்பாக செய்தியாளர்கள் அப்துல் ரஹ்மான், தமீம் அன்சாரி, காஜா மொய்தீன் ஆகியோர் 75 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் தண்ணீர் பாட்டலுடன் அப்பகுதி மக்களுக்கு இன்று வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் மயிலை பகுதி முஹம்மது இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டார்.

செய்தியாளர்
முஹம்மது ஆரிப்
தமிழ் மலர் மின்னிதழ்