கொரோனா நோயாளிகளுக்கு முன்னேற்பபாடாக எமெர்ஜென்சி கால படுக்கை வசதி
திருப்பூர் வடக்கு தொகுதி, திருப்பூர் ஒன்றியம், காளிபாளையம் ஊராட்சி, குருவாயூரப்பன் நகர் உயர்நிலைப்பள்ளியில் எமர்ஜென்சி கால முன்னேற்பாடாக கொரோனா நோயாளிகளுக்கு அமைக்கப்பட்டுவரும் படுக்கை வசதிகளை திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு கே என் விஜயகுமார் எம்எல்ஏ அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்வில் பேரவை ஒன்றிய செயலாளர் எஸ் எம் பழனிசாமி, மாவட்ட கவுன்சிலர் எம்.சாமிநாதன், கூட்டுறவு சொசைட்டி தலைவர் பொண்ணுலிங்கம், ஊராட்சி மன்றத் தலைவர் சுகன்யா வடிவேல் முத்துக்கருப்பண்ண சாமி ஆகியோர் சமூக இடைவெளி பின்பற்றி கலந்து கொண்டனர்.தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் விஜயராஜ்